ரஜினிக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் திடீர் அனுமதி

ரஜினிக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் திடீர் அனுமதி
X

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று மாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு உடல்நல பாதிப்பு எதுவும் இல்லை; விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் லதா ரஜினிகாந்த் மேலும் கூறினார். பரிசோதனை முடிந்து நாளை காலை ரஜினி வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ரஜினியுடன் மருத்துவமனையில் லதா ரஜினிகாந்த், அவரது தம்பி ராகவேந்திரா உள்ளிட்டோர் உடன் இருக்கின்றனர்.

அண்மையில் டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில், தாதா சாகேப் பால்கே விருதை பெற்ற ரஜினிகாந்த், பின்னர் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்தார். அதேபோல், அண்ணாத்த திரைப்படத்தை பேரக்குழந்தைகளுடன் பார்த்த தகவலையும், இன்று ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!