அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு
X

விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி உள்பட, என 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் நந்தனம் சேமியர்ஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கரின் வீடும், இந்த சோதனையில் தப்பவில்லை.

இதேபோல், விஜயபாஸ்கரின் உறவினர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் இச்சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 29,இடங்களில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

விராலிமலை அருகே இலுப்பூரில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் வீடும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கியுள்ளது. கோவை ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதல் தகவல் அறிக்கை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில், விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை குறித்த முழு விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை, பதவியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த‌தாக வழக்குப்பதியப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்