மதுரையில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

மதுரையில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி
X
எடப்பாடிக்கு உரிய பாடத்தை, தண்டனையை தொண்டர்கள் வழங்குவார்கள் என்று மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓபிஎஸ்-க்கு மதுரை விமான நிலையத்தில் தென் மாவட்ட மக்களின் சார்பில் அதிமுக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

புரட்சி தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உயிரான தொண்டர்களுடன் என்றும் நான் இருப்பேன்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை மனிதாபிமான இயக்கமாக தமிழக மக்களின் அன்பையும் பெற்று 30 ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக அவர்கள் நல்லாட்சி நடத்தி இருக்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது ? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதற்கு விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொண்டர்கள் உரிய பாடத்தை, தண்டனையை வழங்குவார்கள் என்று கூறினார்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி