இப்ப அந்த படம் ரெடியாவது டவுட்

இப்ப அந்த படம் ரெடியாவது டவுட்
X
அச்சச்சோ.. ரஹ்மானுக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தாச்சே

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' அப்ப்டீங்கற ரெண்டு படங்கள் வெளியாச்சு. இதில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதர மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

அதை அடுத்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரிய போறதாவும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்த்தை புரொட்யூஸ் பண்ண போறதாவும் செய்தி வந்துச்சில்லா.. இப்ப அந்த படம் ரெடியாவது டவுட்-ன்னு நியூஸ் வருது..இது குறிச்சு விசாரிச்சா.. இப்ப கொஞ்சம் உச்சக்கட்ட பணக் கஷ்டத்தில் இருக்கும் கெளதம் மேனன் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' பட ஷூட்டின் போது,' வெற்றிமாறனை கதை நாயகனாக வைத்து ஒரு ஸ்டோரி ரெடி செஞ்சு அவரையும் கன்வின்ஸ் செஞ்சுபுட்டதுதான் காரணமுன்னு சொல்றாய்ங்க

இன்னொரு தரப்பு கெளதம் மேனன் அடிக்கடி பணம் கேட்டதால் வேல்ஸ் குரூப் இந்த படத் திட்டத்தை ட்ராப் செஞ்சிட்டதா சொல்றாய்ங்க..

ஆனா.. 'அச்சாச்சோ.. ரஹ்மானுக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தாச்சு.. திட்டமிட்டப்படி இந்த பட வேலை சீக்கிரம் தொடங்கும்முனும் சொல்லிக்கிறாய்ங்க..

ஹூம்.. பார்க்கலாம்..

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!