நோ அரசியல் : ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து ரஜினிகாந்த் உத்தரவு

நோ அரசியல் : ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து ரஜினிகாந்த் உத்தரவு
X
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நோ அரசியல் : ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தை கலைப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகும் ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.

இதை விளக்க வேண்டியது என்னுடைய கடமையாகும். அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.

ஆனால் காலச் சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்பு அணிகளின் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள், மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்பு இருந்தது போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.




Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil