/* */

திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டத்திற்கு 10ம் தேதி முதல் தடை

நோய்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தலைமைச் செயலாளர் புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டத்திற்கு 10ம் தேதி முதல் தடை
X

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தலைமை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவை பின்வருமாறு;

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்படுகிறது.

இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

தமிழகத்தில் உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க வேண்டும். அதே வேளையில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ- பதிவு முறை தொடரும்.

தியேட்டர்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி வழங்கப்படும்.

Updated On: 8 April 2021 12:12 PM GMT

Related News