பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம்

பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம்
X
இலவசமாக பயணம்

பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் இன்று அமலுக்கு வந்தது. தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றவுடன் ஐந்து முக்கிய உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார்.

இதில் தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற திட்டமும் ஒன்றாகும். இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக நகரப் பேருந்துகளின் முன்புற கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது. அதில், பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற வாசகங்கள் அடங்கி இருந்தது.

இந்நிலையில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமலுக்கு வந்துள்ளது. திருச்சி

மத்திய பேருந்து நிலையத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அரசு பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதில் பெண்கள் இலவசமாக பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!