தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம்
X
நல்லதே நடக்கும்

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (07.05.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொறறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் நாளை (07.05.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் வருமாறு தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை வார்டு: 53 கேம்ப் 1 மாநகராட்சி பள்ளி மெயின், வார்டு:19 பூபால்ராயர்புரம் மெயின் , வார்டு: 5 அம்பேத்கர்நகர் வார்டு ஆபிஸ், வார்டு: 50 சத்யா நகர் மெயின், வார்டு: 23 வடககு பத்திரகாளியம்மன் கோவில் தெரு மெயின் ஆகிய பகுதிகளிலும்,

காலை 11 மணிமுதல் 1 மணி வரை வார்டு: 60 ஹார்பர் காம்ப்ளக்ஸ் மெயின், வார்டு: 22 சத்யா தெரு மெயின், வார்டு:10 கிருஷ்ணராஐபுரம் 1வது தெரு பெருமாள்கோவில் அருகில், வாhடு : 48 கணேசன் காலனி 1வதுதெரு (பிள்ளையார்கோவில் அருகில்), வார்டு: 28 சண்முகபுரம் பிராப்பர் 1வது தெரு, (கருப்பசாமி கோவில் அருகில்) ஆகிய பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை வார்டு: 59 கணேஷ்நகர் மேற்கு மெயின், வார்டு: 20 மேட்டுப்பட்டி பள்ளிவாசல் தெரு, வாhடு : 7 TMC காலனி காளியம்மன் கோவில் அருகில், வார்டு: 51 முத்துநகர் மெயின், வார்டு : 27 காரப்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் மேலும் கோவில்பட்டி நகராட்சியில் கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை வள்ளுவர்நகர் பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை பாரதி நகர், நடராஜபுரம் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை வேலாயுதபுரம் பகுதியிலும்,

காயல்பட்டிணம் நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை அடைக்கலாபுரம் பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை சண்முகபுரம், ஆறுமுகநேரி பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை ஆறுமுகநேரி போலீஸ் குடியிருப்பு பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை பாண்டியாபுரம், வர்த்தகரெட்டிபட்டி, வடக்கு கோவங்காடு, கொங்கராயன்குறிச்சி, சொகக் லிங்கபுரம் - கீழசெக்காரக்குடி, முப்பாத்தி அம்மன் கோவில் தெரு, காயாமொழி, வடக்கு ரதவீதி - ஆத்தூர், பிரகாசபுரம் - நாசரேத், சுல்தான்புரம் - உடன்குடி, பெருமாள்புரம் - பரமன்குறிச்சி, பூவுடையார்புரம் - முதலூர், அடைகக் லாபுரம் - படுக்கப்பத்து,நரசிம்மபுரம், புதுப்பட்டி, சூரங்குடி, நாகம்பட்டி, கீழக்கரந்தை ஆகிய பகுதிகளிலும்,

11 மணிமுதல் 1 மணி வரை குலையன்கரிசல், தெற்கு கோவங்காடு, ஆழ்வார்கற்குளம், கீழசெகக்காரக்குடி டி, தளவாய்புரம் - மேலதிருச்செந்தூர், மிக்கேல்நாடார் குடியிருப்பு - ஆத்தூர், நாசரேத், வில்லிகுடியிருப்பு -உடன்குடி, வைத்திலிங்கபுரம் - உடன்குடி, கொழுந்தட்டு, வடக்கு உடைபிறப்பு - படுகக் ப்பத்து, ஜமீன் தேவர்குளம், கொப்பம்பட்டி, தங்கம்மாள்புரம், குதிரைகுளம், மேலக்கரந்தை ஆகிய பகுதிகளிலும்,

பகல் 2 மணிமுதல் 4 மணி வரை ராமசந்திராபுரம், குமாரகிரி, புல்லாவெளி, வசவப்பபுரம், இந்திராநகர், அனவரதநல்லூர், வடககு காரசேரி, அடைக்கலாபுரம் மெயின் ரோடு, தெற்கு ஆத்தூர், வடக்கு தெரு - ஆழ்வார்திருநகரி, மாரியம்மாள்புரம் - உடன்குடி, நடுகாலான்குடியிருப்பு, வாழத்தூர், புதூர் - படுகக் ப்பத்து, கோமதி நகர், கோடங்கால் காலனி, கே.சண்முகாபுரம், ஜம்புலிங்கபுரம், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோயத் தொறறு குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business