ஒரு தடவை முடிவு பண்ணிட்டா...

ஒரு தடவை முடிவு பண்ணிட்டா...
X
பட்சி சொல்லுது..பறந்து போறது..

சண்டேசினிமா ஸ்பெஷல் அப்டேட்...

நம்ம இளைய தளபதி விஜய் ஒரு படத்தில் பேசும் வசனத்தை வாழ்நாளில் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றாராம் பட்சி சொல்லுது..

அதான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் என்பது தான் அண்மையில் எஸ் ஏ சந்திரசேகர் தன் இஷ்டத்துக்கு விஜய் பேரில் கட்சி, அது, இது என எல்லை மீறி போனதில் கடுப்பான தளபதி தன் அப்பா தொடர்ப்பை துண்டித்து விட்டாராம்..

முன்னெல்லாம் மாதமிருமுறை வாரிசுகள் தாத்தா மற்றும் பாட்டியை போய் பார்த்து வருவார்களாம்.. நம்ம எஸ் ஏ சி-யின் எலெக்‌ஷன் கமிசன் அப்ரோச்-சுக்கு அப்புறம் பசங்களோட செல்போனில் கூட தாத்தா பாட்டி போன் நம்பரை டெலிட் செய்ய வைத்து விட்டாராம் இளையதளபதி.

இதனை சற்றும் எதிர்பாராத எஸ் ஏ சி நீண்ட மன்னிப்பு கடிதாசு எல்லாம் எழுதி விஜய் ரூம் வரைக்கும் கொண்டு போய் சேர்த்து விட்டு வந்தாராம் .. ஆனால் வந்ததை ஓப்பன் கூட பண்ணவில்லை என்பது தெரிந்து நொந்து போய்விட்டாராம்

இதெல்லாம் போகட்டும் கொஞ்ச நாளைக்கு நீலாங்கரை வீட்டுக்கே தன் மனைவியுடம் போனாராம். இவர் வந்தது . காரிலேயே இருப்பது எல்லாம் தெரிந்தும் கண்டுக் கொள்ளாமல் சில மணி நேரங்களைக் கடத்திய்ட விஜய் தன் அம்மா வை மட்டும் வீட்டுக்குள் வரச்சொல்லி விட்டு அவரை திரும்பிப் பார்க்காம போகச் சொல்லிட்டாராம்..

ஒரு அரசியல் புகுந்த வீடு வரும் காலங்களில் இப்படித்தான் ஆகும் என உணர்த்தும் போக்கு அப்படின்னு இன்ஸ்டா செய்தி குழுமத்திற்கு பட்சி அனுப்பிய சேதியிதுதான்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!