கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா உறுதி

கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா உறுதி
X
கிரிக்கெட் மன்னன் என்று அழைக்கப்படும் சச்சினுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனிமை ல் தனிமைப்படுத்திக்கொண்டார்.


இது தொடர்பாக சச்சின் அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

கொரோனாவில் இருந்து என்னை பாதுகாத்துக்கொள்ள முறையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நான் செயல்பட்டதால் கொரோனா இருப்பது தெரிய வந்தது. லேசான கொரோனா அறிகுறி இருந்ததையொட்டி பரிசோதனையில் கொரோனா உறுதியானது. ஆனால், என் வீட்டில் வேறு யாருக்கும் கொரோனா இல்லை.

நான் வீட்டிலேயே என்னை, தனிமைபடுத்தி கொண்டுள்ளேன். டாக்டர்கள் எனக்கு தேவையான வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி நான் நடந்து வருகிறேன். எனக்கு வழிகாட்டும் டாக்டர்கள் மற்றும் என் நல விரும்பிகளுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது