சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை
X
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இரவில் மழை பெய்த நிலையில், இன்று காலையிலும் பல இடங்களில் மழை நீடித்து வருகிறது. இதையடுத்து சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழை தொடரும் நிலையில், அங்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், விடுமுறை உண்டா இல்லையா என மாணவர்கள் அரசின் அறிவிப்பை எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், ஒருசில மாவட்ட நிர்வாகங்கள் தாமதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!