கலை & அறிவியல் கல்லூரி முதலாமாண்டு நேரடி வகுப்புகள் அக்.4 ல் தொடக்கம்

கலை &  அறிவியல் கல்லூரி முதலாமாண்டு நேரடி வகுப்புகள் அக்.4 ல் தொடக்கம்
X

கோப்பு படம் 

தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள், அக். 4 முதல் தொடங்குகின்றன.

தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு நேரடி வகுப்புகள், வரும் அக்டோபர் 4 ம் தேதி முதல் தொடங்கும் என்று, கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. ஆன்-லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தன. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல், 10ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்புகள் வரை, நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாமாண்டு நேரடி வகுப்புகள் தொடங்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், உரிய வழி காட்டு நெறிமுறைகளுடன், வருகிற அக். 4 ம் தேதி முதல் நேரிடையாக வகுப்புகளை துவங்க வேண்டும். மாணவர்கள் தடுப்பசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று, கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!