தமிழக அரசை சூசகமாக பாராட்டிய அண்ணாமலை: அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி..!

தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை.
தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு, ஊட்டச்சத்து மாவு, ஆவின் நெய், பேரீச்சம்பழம், இரும்பு சத்து டானிக் உள்பட 8 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இதனை கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு விடுத்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை கிளம்பியது.
இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு ஆவின் அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆதாரங்களுடன் பதில் அளித்தார். மேலும், விதிமுறைகளின்படி ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டர் நடைபெறும் என்று தமிழக அரசு உறுதிபட தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், பாஜக குற்றச்சாட்டை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று சூசகமாக தமிழக அரசை பாராட்டுவது போல அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளதார். மேலும் கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்றதாகவும், அதன் அடிப்படையில் ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாகவும் ஆதாரங்களுடன் பாஜக உறுதிப்படுத்தியது.
இந்த பின்னணியில் குறிப்பிட்ட டென்டரில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்திற்கு தற்போது ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. பாஜக வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு ஏற்ப தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை திடீர் பாராட்டை அரசுக்கு அள்ளி வழங்கியிருப்பது, அ.தி.மு.க உள்ளிட்ட பிற எதிர்க்கட்சியினர் இடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.சூச்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu