ஸ்ரீபெரும்புதூர் அருகே 8.5 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்,6 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே 8.5 டன் எடையுள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்,6 பேர் கைது
X

ஆந்திர மாநில போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 8.5 டன் செம்மரக் கட்டைகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சின்ன வளர்புரம் கிராமத்தில் உள்ள தனியார் குடோனில், ஆந்திராவில் இருந்து வெட்டப்பட்டு, கடத்தி வந்து வைக்கப்பட்டிருந்த 8.5 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர், இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் , ராம்ராஜ் , பிரபு , விஜயகுமார் , சம்பத் , அப்புசாமி ஆகிய 6 பேரும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேஷாசலம் காட்டு பகுதியில் சுற்றித் திரிந்த போது ஆந்திர மாநில காவல்துறை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள செம்மரக்கட்டைகளை வெட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன வளர்புரம் கிராமத்தில் உள்ள குடோனில் மறைத்து வைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் அதன்பேரில் ஆந்திர மாநில செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு பிரிவினர் 3:00 மணி அளவில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையிடம் இணைந்து குடோனில் ஆய்வு செய்ததில் 8.5 டன் செம்மரக் கட்டைகள், கடத்த உதவிய இரண்டு நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து ஆந்திர மாநிலத்திற்கு எடுத்து சென்றனர்.

Tags

Next Story
ai marketing future