/* */

மேலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 780 கிலோ புகையிலை பறிமுதல்

மேலூர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 780 கிலோ புகையிலையை பறிமுதல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

மேலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 780 கிலோ புகையிலை பறிமுதல்
X

மதுரை மேலூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, மேலூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பதுக்கி வைத்திருந்த 3 நபர்கள் கைது. ரூ.10 இலட்சம் மதிப்புள்ள 780கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்களை பதுக்குதல், கடத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினருக்கு புகையிலைப் பொருட்கள் பதுக்கல் சம்மந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேலூரை சேர்ந்த வேலாயுதம் 47, முரளி 34, அருண்குமார் 24 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்படி எதிரிகள் புகையிலைப் பொருட்களை மதுரை மாவட்டத்தில் மேலூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட உள்ள திருவாரூர் பகுதியில் பதுக்கி வைத்திருந்தனர். இதை தனிப்படையினர் சோதனை செய்தனர். இதில் சட்டத்திற்குப் புறம்பாக புகையிலைப் பொருட்களை பதுக்கி் வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும், இது சம்பந்தமாக மேலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்கள் 780கிலோ இதன் மதிப்பு (ரூபாய் 10 லட்சம்) மற்றும் இரண்டு கார் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலை விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகையிலைக் பொருட்களை பயன்படுத்துவதால் சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவுகளை தடுக்க ஏதுவாக அதுகுறித்த தகவல்களை உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

Updated On: 24 April 2022 4:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...