1 - 8 ஆம் வகுப்புகளுக்கு நவ.1ல் பள்ளிகள் திறப்பு: தமிழகஅரசு அறிவிப்பு
தமிழகத்தில், நவம்பர் ஒன்றாம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல், 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோரின் கருத்து கேட்டதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாரத்தின் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் வழிபட தடை தொடரும் என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை குறைதீர் கூட்டமும், மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டமும் இனி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கொரோனா விதிமுறைகளை, பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, கொரோனா நோய்த்தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றுபகல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா தீவிரம் குறைந்ததன் காரணமாக, செப்டம்பர் 1ஆம் தேதி முதல், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu