தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவராக அண்ணாமலை நியமனம்
X

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. 

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவராக, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




இதுவரை தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய அமைச்சரானதால் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையை நியமித்து, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக துணைத் தலைவராக இருந்து வந்த அண்ணாமலை, தற்போது மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு, அண்ணாமலை தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி