மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
X

திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கள நிலவரம், கட்சி வலிமை, எதிர் தரப்பினரின் நிலைமை ஆகியவற்றை ஆய்வு செய்தே வேட்பாளர் பட்டியல் தயாரித்துள்ளதாகவும், இந்த முறை வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்த முறை நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் பிடிவாதம் பிடிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.234 தொகுதிகளில் வெற்றியை பெற்றிட அனைவரும் அயராது பாடுபடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் மகத்தான வெற்றி பெற்று கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கையாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் பிடிவாதம் பிடிக்கக் கூடாது - மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!