பிரதமர் மோடியின் சிறப்பானஆட்சி விமான போக்குவரத்து துறை முன்னேற்றம் மத்திய அமைச்சர் சென்னையில் பேச்சு
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசினார்.
past 8 yrs ministry of civil aviation, developed
பிரதமர் மோடியின் எட்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தெரிவித்தார்.
விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், புதிய இந்தியா- பல வாய்ப்புகள் என்ற நிகழ்ச்சி, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யாசிந்தியா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
past 8 yrs ministry of civil aviation, developed
பல்லாவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவியின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா .
past 8 yrs ministry of civil aviation, developed
அப்போது, அவர் இந்தியா மாபெரும் ஒரு மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில், மற்ற நாடுகளுக்கு சேவை செய்வதில், இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் மோடி விளங்குகிறார். 50, 60 ஆண்டுகளாக, திறமையான இளைஞர்கள், நாட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். தற்போது, அதைக் கடந்தும், பல துறைகளில் முன்னேற்ற பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறோம்.
100 ஆண்டுகளில், நாம் பார்க்காத மாற்றங்களை, ஏழு, எட்டு ஆண்டுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில், உலகளவில் ஏதாவது பிரச்னை என்றால், இந்தியாவை நாடி வரும் சூழல் உண்டாகியுள்ளது.
உக்ரைன்- - ரஷ்யா போர் பிரச்னைக்கு, இந்தியாவால் தான் தீர்வு கொண்டுவர முடியும் என்ற சூழல் உலகளவில் உருவாகியுள்ளது. சில ஆண்டுளுக்கு முன், இந்தியாவின் பொருளாதாரம், 11வது இடத்தில் இருந்தது. வெகு விரைவில், மேற்கத்திய நாடுகளை முன்னேறி, மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை அடைய போகிறோம்.
பொருளாதாரத்தில், உலக அளவில் இந்தியா தலைசிறந்த நாடாக மாற, அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.விமான போக்குவரத்து துறை பொருத்தவரையில் உலகில் இரண்டாவது உள்நாட்டு பயண போக்குவரத்துக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது சர்வதேச அளவில் பயணிகள் போக்குவரத்தில் ஏழாவது இடத்தில் உள்ளது 2013 -14ல்
70 மில்லியன் பயணிகள் பயணம் செய்த நிலையில் தற்போது 144 மில்லியன் பயணிகள் இந்தியாவில் விமானத்தை பயன்படுத்தி உள்ளனர் 60 மில்லியன் பயணிகள் சர்வதேச விமானப்பயணம் மேற்கொண்டுள்ளனர் இந்த எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் 400மில்லியன் ஆக உயரும்
past 8 yrs ministry of civil aviation, developed
மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பல்லாவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
past 8 yrs ministry of civil aviation, developed
சுதந்திரம் அடைந்த 67 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில் பிரதமர் மோடியின் எட்டரை ஆண்டு ஆட்சி காலத்தில் புதிதாக 73 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது தற்போது 147 விமான நிலையங்கள் இந்தியாவில் உள்ளது இந்த மாதம் பிரதமர் மோடி 148 வதுவிமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்
2013ம் ஆ ண்டில் 400 விமானங்கள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 700 ஆக உள்ளது இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1500 ஆக அதிகரிக்கும் விமான போக்குவரத்து துறை வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது நாட்டில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது உலக அளவில் ஐந்து சதவீதம் பெண் பைலட்கள் உள்ள நிலையில் இந்தியாவில் 15% பெண் பைலட்கள் உள்ளனர் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேம்பாட்டு பணிகள் விமான போக்குவரத்து துறையில் நடைபெற்று வருகிறது விமான போக்குவரத்து துறை மூலம் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது வெளிநாடுகளில் போய் விமானங்கள் தொடர்பாக கல்வியை கற்றவர்கள் நம் நாட்டிலேயே கல்வி கற்கும் நிலை உருவாகிறது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்கள் பங்களிப்பு முக்கியமானது இளைஞர்கள் பெண்கள் இணைந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம் என்றார்
இந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் மற்றும் மாணவர்கள் என, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu