தமிழக அரசை கண்டித்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டம்

தமிழக அரசை கண்டித்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டம்
X

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்.

பெட்ரோல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி, இதர பிற்படுத்தப்பட்டோர் அணி (OBC அணி) மற்றும் அமைப்புசாரா பிரிவின் சார்பில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க கோரியும் தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் லோகநாதன் மற்றும் அமைப்புசாரா பிரிவின் மாநில தலைவர் பாண்டிதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்த மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் 1000 பேர் கலந்து கொண்டு திமுகவை பெட்ரோல், டீசல் விலை குறைக்க முழக்கமிட்டனர்.

அப்பொழுது சித்திரைத் திருநாள் பற்றி நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் ஓபிசி பிரிவு லோகநாதன் கொளத்தூர் தொகுதி குளத்தில் உள்ளது. பிரச்சனையை திசை திருப்பவே சித்திரை திருநாள் பிரச்சினை திமுகவால் பேசப்படுகிறது என்றார்.

சுமதி வெங்கடேஷன் பேசியபோது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுகவை எதிர்த்து தொடரும் போராட்டம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கும் வரை தமிழக பாஜக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம்.

சொல்லாத வாக்குறுதியை பிரதமர் மோடி அவர்கள் தீபாவளியன்று பெட்ரோல் டீசல் விலையை குறைத்தார். பொய்யான வாக்குறுதி தந்த திமுக, மத்திய அரசு குறைத்தால் நாங்கள் குறைப்போம் என்று சொல்லி இப்பொழுது குறைக்கச் சொன்னால் அவர்களால் இயலாது என்று கூறுகிறார்கள் என்று பேசினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!