கார்களில் எந்த ஜோடி டயர்கள் முதலில் தேய்ந்து போகின்றன? அது ஏன்?

கார்களில் எந்த ஜோடி டயர்கள் முதலில் தேய்ந்து போகின்றன? அது ஏன்?
X

காரின் முன்பக்க டயர்.(மாதிரி படம்)

கார்களில் முன் ஜோடி டயர்கள் பின் பக்க டயர்களை விட வேகமாக தேய்ந்துவிடுகின்றன.

பின்புற டயர்களுடன் ஒப்பிடும்போது முன் ஜோடி டயர்கள் முதலில் தேய்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன.

காரை இடம், வலம் என எந்த திசையிலும் திருப்புவது முன் டயர்களின் முக்கிய வேலை. அதாவது பாதை காட்டி என்றும் சொல்லலாம். ஆனால், பின்பக்க சக்கரங்கள், முன்சக்கரங்களை பின்தொடர்ந்து வரும் அடியொற்றிகள்.

இன்ஜின் சுமை : திசை காட்டுவதுடன் இன்ஜின் எடையை தாங்கும் சக்கரங்களாகவும் முன்சக்கரங்கள் உள்ளன.

மேலும், முன் டயர்கள் முன்னோக்கி பயணிக்கும்போது உந்துதலால் ஏற்படும் இழுவையை வாங்கி முன்னோக்கி நகர்த்துகின்றன. அதே நேரத்தில் பின்புற டயர்கள் சுதந்திரமாக உருளுகின்றன. அவ்வாறு முன் டயர்கள் உந்துதலை வாங்கும்போதெல்லாம் டயர்களில் உராய்வு ஏற்பட்டு தேய்மானம் ஆகும்.

பிரேக்கிங் விசை : நாம் பிரேக்குகளைப் பயன்படுத்தும்போது, ​​பின்புறத்திலிருந்து முன்பக்கத்திற்கு எடை பரிமாற்றம் ஏற்படுகிறது. இதனால், முன் டயர்களுக்கு அதிக சக்தி மாற்றப்படுகின்றது. இவ்வாறு சக்தி பரிமாற்றத்தின்போது காரின் ஓட்டத்தை சீரமைத்துக்கொள்ள பின் டயர்களைவிட முன் டயர்கள் அதிக எடையை தாங்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனாலும் முன் டயர்கள் தேய்மானம் அடைகின்றன. அதனால் சாதாரணமாக முன் டயர் தேய்மானம், பின்புற டயர்களை விட இரண்டு மடங்கு வேகமாக இருக்கும்.

கார் பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் டயர் உற்பத்தியாளர்களால் பரிந்துரைக்கப்படும் முறையான சுழற்சி மற்றும் சரியான நேரத்தில் சீரமைப்பு செய்வதன் மூலம், முன் மற்றும் பின் டயர்களின் தேய்மானங்களை சமநிலைக்கு கொண்டுவரலாம். இது டயர்களின் சிறந்த ஆயுளைப் பெறவும், நான்கு டயர்களை ஒரே நேரத்தில் மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறவும் உதவும்.

காரை சீராக இயக்குவதன் மூலம் ஒரே நேரத்தில் நான்கு டயர்களையும் மாற்றுவதற்கு வழிவகுக்கும். இது டயர் ஆயுளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நாம் சிறப்பாக கையாள்வதற்கும் வழிவகுக்கும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!