இனி எலெக்ட்ரிக் கார் மட்டுமே வால்வோ திட்டம்
ஸ்வீடனை தலைமையகமாக கொண்ட வால்வோ நிறுவனத்தை 2010ம் ஆண்டு முதல் சீன நிறுவனம் நடத்தி வருகிறது. கார் தயாரிப்பில் சிறந்த இடத்தை பிடித்துள்ள வால்வோ தற்போது எலெக்ட்ரிக் மாடல்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
தற்போது Volvo XC90 என்ற ஹைபிரிட் மாடலை வால்வோ தயாரித்து வருகிறது. 2022ம் ஆண்டில் இந்த மாடல் கார் விற்பனைக்கு வரலாம் என்று தெரிகிறது. இந்திய மதிப்பில் சுமார் 80 லட்ச ரூபாய் விலையில் விற்பனைக்கு வரலாம் என்று தெரிய வந்துள்ளது. மேலும், இந்திய வாகன சந்தையில் எலெக்ட்ரிக் கார்களுக்கு தனி மரியாதை உண்டு. அதனால் பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பை நோக்கி தங்களின் பார்வையை திருப்பி உள்ளன. இன்று பல முக்கிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தற்போது வால்வோ ஹைபிரிட் காரை உருவாக்கி வருகிறது. எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வகையிலான வடிவமைப்பை அந்த கார் பெற்றிருக்கும். 2025ம் ஆண்டில் முழுமையாக எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரிக்க வால்வோ திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசும் சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளுக்கு மத்திய அரசு பல வரி சலுகைகளையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu