ஆப்பிளின் கனவு 'எலக்ட்ரிக் கார்' : சுற்றுப்புறத்தின் நண்பன்
ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்ததாக கூறப்படும் எலக்ட்ரிக் கார்.
ஆப்பிள் கார்.. கனவு திட்டத்தில் எல்ஜி, மேக்னா புதிய கூட்டணி
உலகளவில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் கார்களின் தயாரிப்பை நிறுத்திவிட்டு எலக்ட்ரிக் கார் தயாரிப்புகளில் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால், பலஆண்டுகளுக்கு முன்னரே ஐபோன், ஐமேக் போன்ற மிகவும் பிரபலமான கணினிகளைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் ஆட்டோமேட்டிக் எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டது.
ஆனால், இத்திட்டத்தைப் பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருந்தது. ஆனால், டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் உலக நாடுகளையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தை எலக்ட்ரிக் சார் குறித்து சிந்திக்க வைத்தது. அதனால் மீண்டும் தனது கனவுத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை வடிவமைத்து கூட்டணி நிறுவனங்கள் மூலம் கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதேமுறையில் ஆப்பிள் கார்களையும் தயாரிக்க முடிவு செய்து எல்ஜி மற்றும் மேக்னா ஆகிய இரு நிறுவனங்களுடன் அடுத்த சில வாரங்களில் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது நடந்துள்ள பேச்சுவார்த்தையின்படி, ஆப்பிள் பிராண்டில் வெளியாக உள்ள ஆட்டோமேட்டிக் காருக்கான பவர்டிரைன்-ஐ எல்ஜி நிறுவனம் தயாரித்து அளிக்கும். அதை கனடா நாட்டின் மேக்னா அடிப்படையாக வைத்து கார்களை முழுமையாகத் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆப்பிள் பிராண்ட் கார்களை எல்ஜி மற்றும் மேக்னா தயாரிப்பது உறுதியாகியுள்ளது.
எல்ஜி நிறுவனத்திற்கு எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி மற்றும் பவர்டிரைன் தயாரிப்பில் அதிகளவிலான திறனும் அனுபவமும் உள்ளது. இதேபோல் கனடா நாட்டின் மேக்னா நிறுவனத்திற்குப் பல பொருட்களைத் தயாரித்த அனுபவம் அதிகமாக உள்ளது.
ஆப்பிள் கார் திட்டம் குறித்துப் பல முறை செய்தி வெளியாகி தோல்வி அடைந்தது. ஆனால், எல்ஜி மற்றும் மேக்னா உடனான கூட்டணி உறுதியானதாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கார்களுக்கான மென்பொருளான கார்ப்ளே அறிமுகம் செய்த ஆப்பிள் பின்னர் டைட்டன் திட்டத்தைக் கையில் எடுத்தது.
தற்போது டெஸ்லா நிறுவனத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஆப்பிள் தனது கனவு கார் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu