மாநில பழமான அத்திப்பழம் சாப்பிட்டால் உங்க உடம்ப ஆரோக்கியமா வெச்சுருக்குமாமே...! வேறன்ன வேணும்...இனிமேல் மிஸ் பண்ண மாட்டோம்ல...? | Athipalam Benefits In Tamil

Athipalam Benefits In Tamil
X

 Athipalam Benefits In Tamil

Athipalam Benefits In Tamil - அத்திப்பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் அது தொடர்பான செய்திகளை காணலாம்.


அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

அத்தி மரம் பற்றிய அடிப்படை தகவல்கள்: நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி என பல வகைகள் உண்டு. சுமார் 10 மீட்டர் உயரம் வளரக்கூடிய இம்மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

இரத்த சோகை குணமாகும் | Athipalam Benefits In Tamil

இரவில் 3-5 பழம் வரை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீருடன் இப்பழத்தையும் சாப்பிட்டுவர உடலில் புதிய இரத்தத்தை உற்பத்திசெய்து இரத்த சோகையை முற்றிலும் குணமாகிவிடும்.

சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்

அத்திப்பழத்தில் உள்ள நார்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் பச்சையான அத்திக்காயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம்.

இரத்த அழுத்தம் சீராகும்

பொட்டாசியம் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரித்து இரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை குறைக்கிறது. தினமும் 2-3 பழங்கள் சாப்பிட்டுவரலாம்.

மலசிக்கல் பிரச்னைக்கு தீர்வு | Athipalam Benefits In Tamil

கரையக்கூடிய நார்ச்சத்து குடலின் உட்பகுதியை நன்கு சுத்தமாக்கி, மூலவியாதி வராமல் தடுக்கிறது. தினமும் உணவிற்குப் பிறகு 5 பழங்களை இரவில் சாப்பிடவேண்டும்.

உடல் எடையை குறைக்க உதவும்

காலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் அளவுக்கு மீறி எடுத்தால், உடல் எடை அதிகரிக்கும்.

ஹார்மோன் சமநிலை

மாதவிடாய் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்கள் கண்டிப்பாக அத்திப்பழம் சாப்பிடுவது நல்லது. இது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

Tags

Next Story