சங்க கால இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஆப்பம்..!

சங்க கால இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஆப்பம்..!
X

ஆப்பம் 

தமிழகத்தின் முக்கிய உணவான ஆப்பம் பற்றிய குறிப்புகள் சங்க கால இலக்கியங்களில் உள்ளது.

ஆப்பத்தின் பூர்வீகம் ஶ்ரீ லங்கா மற்றும் தமிழ்நாடு தான். ஆனால் ஆப்பம் இப்போ கேரள உணவுண்ணு சொல்றாங்க. இப்படி தாங்க தமிழனோட எல்லாத்தையும் மத்தவங்க சொந்தம் கொண்டாடறாங்க.

ஆப்பம் நம்ம சங்ககாலத்தில் இருந்தே நம்முடைய இலக்கியங்களில் இடம் பிடிச்சு இருக்குங்க. பெரும்பானாற்று படைல, சாலை ஓர உணவகத்தில் பனியாரத்தோட ஆப்பமும் விற்பனை செய்யப்பட்டதுனு குறிப்புகள் இருக்குதுங்க.

ஆப்பம் ஒரு தோசை குடும்பத்தை சேர்ந்த உணவு. ஆனால் தோசை ஊத்தற மாதிரி மாவை கல்லில் ஊத்தி தேச்சு விட முடியாது. ஆப்பம் ஊத்துறதே ஒரு கலைங்க. ஆப்ப சட்டிய அடுப்பில் வச்சு எண்ணெய் தேச்சு விட்டு, சூடு ஆனதும், நல்லா ஒரு கரண்டி மாவு எடுத்து நடுவுல ஊத்தி, சட்டியை கையில் எடுத்து அழகாக சுத்தனும்.

மாவு சட்டியோட ஓரங்கள்ல படிஞ்சு கொஞ்சம் மாவு வந்து நடுவுல நிற்கும். நல்லா எண்ணெய் சுத்தி ஊத்தி மூடி போட்டு விட்டுடனும். நல்லா வெந்ததும், அப்படியே சுத்தி எடுத்துவிட்டு தோசை கரண்டில எடுத்தா, ஓரம் எல்லாம் லேசா மொறுமொறுனு பொன் நிறத்துலயும், நடுவுல உப்பி மெதுமெதுனு இருக்கணும். (எங்கங்க ஒரு நாளைக்கு அப்படி வருது. மத்த படி சொதப்புதுன்னு நீங்க முணு முனுக்கிறது கேட்குது. நான் சொல்ற ரெசிபி ய ஃபாலோ பண்ணுங்க, kandippa success தாங்க.)

ஆப்பம் சுட தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி. ........... 1 கப்

பச்சரிசி. 1 கப்

உருட்டு உளுந்து. 1/4 கப்

வெந்தயம். 1/4 ஸ்பூன்

ஜவ்வரிசி. 50 gm

தேங்காய் துருவல். ஒரு கை அளவு

உப்பு. தேவையான

செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து கழுவி 4 மணி நேரம் ஊற வைக்கனும். ஜவ்வரிசிய தனியா ஊறவைங்க. நல்லா ஊறியதும் கிரைண்டர் இல்லன்னா மிக்சி ல முதல்ல ஜவ்வரிசி ய போட்டு அரச்சிட்டு நல்லா அரஞ்சதும் அரிசி உளுந்து வெந்தயத்தை போட்டு நல்லா மைய்ய அரைங்க. கூடவே தேங்காய் துருவல் சேர்க்க மறந்துடாதீங்க. இது கூட மதியம் செஞ்சு மிச்சமான சாதம் இருந்தால் ஒரு கை சாதம் போட்டு அரச்சு எடுத்துக்கோங்க.

இது இன்னும் உங்க ஆப்பத்தை பஞ்சு மாதிரி மாத்தும். அரச்சு எடுத்து உப்பு சேர்த்து கலக்கி தட்டு போட்டு மூடி வச்சுடுங்க. காலைல எடுத்து நல்லா கலக்கி தேவையான தண்ணீர் சேர்துக்ககோங்க. ஆப்பம் மாவு இட்லி மாவு மாதிரி கெட்டியா இருக்கக்கூடாது. கொஞ்சம் தளர்வாக இருக்கணும்.

ஆப்ப சட்டியை அடுப்பில் ஏத்தி நான் சொன்ன மாதிரி ஆப்பம் ஊத்தி எடுங்க. சைட்டிஷ் என்னனு கேட்கிறது காதுல விழுது. ஆப்பத்துக்கு ன்னாவே தேங்காய் பால், கடலைக் கறி, வெங்காய சட்னி, நம்ம கொங்கு ஸ்டைல் கத்திரிக்காய் பஜ்ஜி, எல்லாம் வரிசை கட்டி வந்தாலும், நம்ம மிளகாட்டி தக்காளி குழம்பு வச்சு பாருங்க இன்னும் 2 ஆப்பம் எக்ஸ்ட்ராவா உள்ள போகும்.

Next Story