உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் ஏலம்: ரூ.286 கோடிக்கு விற்பனை

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் ரூ.286 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-09 07:33 GMT

எஸ்ட்ரெலா டி ஃபுரா (புறாவின் இரத்தம் )என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய மாணிக்க கல் சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பபட்டது. கடந்த ஜூலை மாதம் மொசாம்பிக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல் குறிப்பிடத்தக்க விலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது.


முதலில் 101 காரட் எடை கொண்ட இந்த கல், பின்னர் 55 காரட் எடை கொண்ட குஷன் வடிவ ரத்தினமாக வெட்டப்பட்டுள்ளது. மேலும் சிறந்த தெளிவு மற்றும் நிறத்தைக் கொண்டுள்ளது. இது பொதுவாக "புறாவின் இரத்தம்" என்று குறிப்பிடப்படும் பிரகாசமான சிவப்பு நிறத்தைக் காட்டுகிறது. மொசாம்பிக் மாணிக்கங்களுக்கான புதிய மற்றும் பிரபலமானதாக பாரம்பரிய பர்மிய தோற்றத்துடன் உருவெடுத்துள்ளது.


இதுவரை ஏலத்தில் தோன்றிய மிகப்பெரியதும், மிகவும் மதிப்புமிக்கதும் மான எஸ்ட்ரெலா டி ஃபுரா  என்ற மாணிக்க கல், நேற்று (ஜூன் 8ம் தேதி) நியூயார்கில் ரூ.286 கோடிக்கு ($34.8 மில்லியனுக்கு) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. "Estrela de Fura 55.22" என்றால் போர்ச்சுக்கீசிய மொழியில் Fura நட்சத்திரம் என்று பொருள்.


இதற்கு முன்னர் 2015ம் ஆண்டு "சன்ரைஸ் ரூபி" என்ற 25.59 காரட் பர்மிய மாணிக்க கல் 30.3 மில்லியன் டாலருக்கு ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News