உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படுகின்றது

மக்கள்தொகை பற்றிய விவாதத்தை நடத்துவதற்கென சர்வதேச தினம் தேவை என முடிவுசெய்யப்பட்டது. இதன் விளைவாக இன்றைய தினம் உலக மக்கள் தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

Update: 2021-07-11 05:28 GMT

உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படும். உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக இந்த தினம் திகழ்கிறது.

உலகிலே ஜனத்தொகை வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடுகளிலும் உணவுப் பற்றாக்குறை, நிலப் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, சூழல் பிரச்சினைகள் என பல பிரச்சினைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது ஜனத்தொகை. உலகம் முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் எடுக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி உலக மக்கள்தொகை 730 கோடியாக உள்ளது. அது போல் இந்திய மக்கள்தொகை 2016-ன்படி 132. 42 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி அன்று இந்த எண்ணிக்கை 3 கோடி உயர்ந்து 135 கோடியானது, இப்போ எவ்வளவு என்பதை இந்த https://www.worldometers.info/world-population/  லிங்கில் போய் பார்த்து அறிந்து கொள்ளுங்க.

1989-ம் ஆண்டு ஐ.நா., மக்கள்தொகை அதிகரிப்புபற்றி விவாதிப்பதற்காகக் கூடியது. மக்கள்தொகை பற்றிய விவாதத்தை நடத்துவதற்கென சர்வதேச தினம் தேவை என முடிவுசெய்யப்பட்டது. இதன் விளைவாக இன்றைய தினத்தை உலக மக்கள் தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

Tags:    

Similar News