புதுச்சேரியில் தொடங்கிய பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.தேர்தலில் 12 பேர் பிரான்ஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்;

Update: 2022-04-10 07:49 GMT

பிரான்ஸ் நாட்டின் 12 வது அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 12 பேர் பிரான்ஸ் அதிபர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.இந்தநிலையில் இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களும் வாக்களிக்கும் வகையில் பிரெஞ்ச் தூதரகம் வாக்குபதிவு மையங்களை அமைத்துள்ளது.

அந்த வகையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் 4,564 பிரஞ்சு வாக்காளர்கள் உள்ளனர். தற்போது புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பகுதியில் பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News