அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் செல்லும் திட்டம் இல்லை: வெள்ளை மாளிகை விளக்கம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டுக்கு செல்ல எந்த திட்டமும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Update: 2022-04-19 02:53 GMT

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டை பார்வையிட அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்த நிலையில், அதிபருக்கு பதிலாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவிற்கு எதிரான போரில் அமெரிக்காவின் ஆதரைவை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு வரவேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் பைடன் உக்ரைன் செல்லும் எந்த திட்டமும் இல்லை என்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கீவ் நகரில் ஜெலன்ஸ்கியை சந்தித்துள்ள நிலையில், பைடன் உக்ரைன் பயணம் சிக்கலான பாதுகாப்பு சவால் நிறைந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News