வங்கதேச கலவரத்தின் பின்னணியில் அமெரிக்கா சதி: வாய் திறந்தார் ஷேக் ஹசீனா

வங்கதேச கலவரத்தின் பின்னணியில் அமெரிக்காவின் சதி இருப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

Update: 2024-08-11 12:35 GMT

வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா.

வங்கதேச கலவரத்தின் பின்னணியில் அமெரிக்கா சதி  செய்து இருப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.

நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட கலவரம் ராணுவ புரட்சி வரை சென்று விட்டது.வங்க தேச உருவாக்கத்திற்காக 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் உயிர் நீத்த வீரர்களின் வாரிசுகள் மற்றும் உறவினர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இருந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த நாட்டில் மாணவர் அமைப்புகள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.

மாணவர்களின் போராட்டத்தை கருத்தில் கொண்டு  நீதிமன்றம்  அதனை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஷேக் சீனா மீண்டும் இட ஒதுக்கீட்டை அமல் படுத்தினார். இதற்கு எதிராக மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை அடக்க போலீசும் ராணுவம் முயன்ற போது கலவரம் வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை 30 சதத்திலிருந்து5 சதவீதமாக குறைத்தது. இதனால் மாணவர் அமைப்புகள் ஓரளவு திருப்தி அடைந்து இருந்தாலும், ஏற்கனவே நடந்த கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் மற்றும் நீதி கேட்டு மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தின் போது மீண்டும் கலவரம் வெடித்தது. மாணவர்கள் அமைப்புகளுடன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஆளும் அவாமி லீக் கட்சிக்கு எதிராக இருந்த அரசியல் கட்சிகள் சேர்ந்து கொண்டதால் போராட்டம் மிகப்பெரிய கலவரமாக மாறியது. எங்கு பார்த்தாலும் வன்முறை தாண்டவமாடியது. கலவரத்தை போலீசாரால் அடக்க முடியவில்லை இதனால் ராணுவம் களம் இறங்கியது.

மாணவர் அமைப்புகள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் .அவர் நாட்டை விட்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார்கள். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கடந்த ஐந்தாம் தேதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அத்துடன் தனக்கு விசுவாசமான ராணுவ அதிகாரிகளுடன் அவர் அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவின் தஞ்சம் புகுந்தார்.அவருக்கு இந்திய அரசு அடைக்கலம் கொடுத்துள்ளது. தற்போது வரை அவர் இந்தியாவில் எந்த இடத்தில் இருக்கிறார் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர் ரகசிய இடத்தில் பாதுகாப்புடன் இருக்கிறார்.

அதே நேரத்தில் அவர் அமெரிக்கா அல்லது இங்கிலாந்துக்கு செல்வதாக திட்டமிட்டு இருந்ததும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே வங்கதேசத்தில் கலவரம் முடியும் வரை அவர் இந்திய நாட்டின் அரசியல் தஞ்ச விருந்தினராக இருப்பார் என்று கருதப்படுகிறது.

இந்த சூழலில் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த பின்னர் முதல்முறையாக ஷேக் ஹசீனா ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னணியில் அமெரிக்காவின் சதி உள்ளது அமெரிக்க கடந்த சில ஆண்டுகளாகவே வங்கதேசத்துக்கு சொந்தமான ஒரு குட்டி தீவில் ராணுவத்தளம் அமைப்பதற்கு அனுமதி கேட்டார்கள். நான் அனுமதி கொடுக்காததால் அவர்கள் கலவரத்தை தூண்டி விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஷேக் ஹசீனா அமெரிக்கா மீது குற்றம் சாட்டி இருப்பதால் அவர் இனி அமெரிக்காவில் தஞ்சம் அடைவதற்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. வங்கதேசத்தில் நடைபெற்ற  கலவரம் மற்றும் தற்போதைய அரசியல் சூழலை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அடுத்து அங்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News