சமீபத்தில் அமெரிக்க மருத்துவ நிபுணர் ஒருவர், அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "கொரோனா பரவிய இடத்திலிருந்து இன்னொருவருக்கு கரோனா பரவியதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை" என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு & பாதுகாப்பு மையம், கொரோனா தடுப்பிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொடும் இடத்திலிருந்து மற்றவர்களுக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்படும் என கருதப்பட்டு வந்தது.இதனையொட்டியே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளும், அவர்கள் பயன்படுத்திய இடங்களும் தீவிரமாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பாதிக்கப்பட்டவர் இருமும்போது, அவர் வாய் மற்றும் மூக்கு வழியாக வெளியேறும் துளிகளால் மட்டுமே கொரோனா அதிக அளவில் பரவுகிறது எனவும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு & பாதுகாப்பு மையம் கூறியுள்ளது.