அமெரிக்காவில் 12 மாடி குடியிருப்பு கட்டிடம் சரிந்து, விழுந்தது : 102 பேரை தேடும் பணி தீவிரம், 35 பேர் மீட்பு
அமெரிக்காவின் புளோரிடா மாணகாணம் மியாமி –டேட் கவுண்டி மாநகரில் 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து கீழே விழுந்தது. இதில் 102 பேர் காணவில்லை என்று கூறப்படுகிறது. 35 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
தென் அமெரிக்காவில் உள்ளது புளோரிடா மாகாணம், இது ஒரு கடற்கரை பகுதியாகும். இங்கு மியாமி- டேட் கவுண்டி மாநகரில் நேற்று அதிகாலை 12 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து, சரிந்து கீழே விழுந்தது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் தகவல்கள் கூறுகிறது.
இந்த சம்பவம் குறித்து மியாமி-டேட் கவுண்டி மேயர் டேனியல் லெவின் காவா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சரிவுக்குப் பின்னர் சுமார் 18 மணி நேரம் 99 பேர் காணவில்லை, இருப்பினும் சிலர் அந்த நேரத்தில் கட்டிடத்தில் இருந்திருக்க மாட்டார்கள்.
உயரமான இடது புறத்தின் பகுதியிலிருந்து 35 பேர் வெளியேற்றப்பட்டதாகவும், தப்பிப் பிழைத்தவர்களைத் தேடுவதில் பயிற்சி பெற்ற நாய்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்ப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இடிபாடுகளில் இருந்து இரண்டு நபர்களை மீட்பு படையினர் மீட்டனர் அதில் ஒருவர் இறந்துவிட்டார்.
இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேடும் பணிகள் முடிவுற்ற பின்னரே உண்மையான நிலவரம் தெரியவரும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.