உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவில் சேவையை நிறுத்திய அமேசான்

ரஷியாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைப்பதாக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்துள்ளது

Update: 2022-03-11 05:45 GMT

அமேசான் (பைல் படம்).

உக்ரைன் மீது ரஷியா 15 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சேவையை ரஷியாவில் நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில், ரஷியாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைப்பதாக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனமும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Live Updates
2022-03-11 06:30 GMT

ரஷியாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைப்பதாக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்துள்ளது

Tags:    

Similar News