மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மூடல்

Drone Attack - ரஷ்யாவின் மாஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நகர விமானம் நிலையம் மூடப்பட்டுள்ளது.

Update: 2023-07-30 08:02 GMT

ட்ரோன்கள் தாக்குதல் நடத்திய சர்வதேச வர்த்தகம் மைய கட்டடம்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டார். இதனையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் கடும் தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்த ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் ஏற்பட்ட போரால் பல இந்தியர்கள் சிக்கித் தவித்தனர். அவர்களை  மீட்க இந்திய அரசு கடும் சிரத்தை எடுத்து வந்தது. சிக்கித்தவித்தவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவ மாணவர்கள் ஆகும்.

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோவில் இணைய உக்ரைன் இணைய முன்வந்ததை அடுத்து ரஷ்யா போர் தொடுத்தது. இதனிடையே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றன. இதனால் சுமார் 500 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யா மீது இன்று அதிகாலை திடீரென உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி வந்த உக்ரைனின் 3 ட்ரோன்களில்  ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மற்ற இரண்டு ட்ரோன்கள் சர்வதேச வர்த்தகம் மைய கட்டடம் மீது மோதியாக ரஷ்யா பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. உக்ரைனின் திடீர் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் மீது எதிர்தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

Similar News