AI சாட்போட் மூலம் கேள்விகளுக்கு பதிலளித்த பில்கேட்ஸ், இங்கிலாந்து பிரதமர்
AI சாட்போட் மூலம் பல்வேறு கேள்விகளுக்கு பில்கேட்ஸ் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பதிலளித்த வீடியோ யூடுப்பில் வெளியாகியுள்ளது.;
பில் கேட்ஸும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து கொண்டனர். அப்போது பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதித்தனர். இதனையடுத்து AI சாட்போட் மூலம் லண்டன் இம்பீரியல் கல்லூரி மாணவர்கள் எழுப்பி கேள்விகளுக்கு இருவரும் சுவாரசியமாக பதிலளித்தனர்.
அப்போது பில்கேட்ஸ் மற்றும் ரிஷி சுனக் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் பற்றி விவாதித்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்தை குறித்தும் உரையாடினர். இந்த நேர்காணல் மிகவும் பிரகாசமானது என இருவரும் கருத்து தெரிவித்தனர். AI சாட்போட் மூலம் நடந்த இந்த நேர்காணல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடைபெற்றது. டவுனிங் ஸ்ட்ரீட் மூலம் இந்த வீடியோ யூடுபில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது .