இங்கிலாந்தில் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன.அந்த வகையில் கடந்த 7 நாட்களில் புதிய கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை சராசரியாக 3,256 ஆக உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 5,065 ஆக இருந்தது.
மார்ச் மாத இறுதியில் இருந்து பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவாக பதிவாகி வருகின்றது.ஜனவரி தொடக்கத்தில் இரண்டாவது அலையிலிருந்து ஒரு பெரிய வீழ்ச்சியாக உள்ளது.இரண்டாவது அலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 60,000 பாதிப்புக்களை எட்டியது.
மேலும் சராசரி தினசரி இறப்புகள் தற்போது 30 ஆக உள்ளது - இது முந்தைய கணக்கெடுப்பின்படி வாரத்தில் 55 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது