ஒன்றாக சேர்ந்து ஹிட்லரை தோற்கடித்தோம், புதினையும் தோற்கடிப்போம் - உக்ரைன் வெளியுறவு அமைச்சர்

Update: 2022-02-27 10:30 GMT

ரஷ்ய படையினர் உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடர்வதால், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி 'உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையணியை அமைப்பதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா, "உக்ரைனின் பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச படையணியின் ஒரு பகுதியாக உக்ரைனையும் உலக ஒழுங்கையும் பாதுகாக்க விரும்பும் வெளிநாட்டவர்கள், உக்ரைனின் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை உங்கள் அந்தந்த நாடுகளில் தொடர்பு கொள்ள உங்களை அழைக்கிறேன். நாம் ஒன்றாக சேர்ந்து ஹிட்லரை தோற்கடித்தோம், புதினையும் தோற்கடிப்போம் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News