உலக பசி தினம் இன்று .
With food scarcity looming large around the world, food wastage has become a major threat.
இன்று உலக பசி தினம்.உணவு கிடைக்காமல் உலகின் பெரும் கூட்டம் வாடிக் கொண்டிருக்க, உணவு வீணடிக்கப்படுதல் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
சர்வதேச அளவில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் இறப்பவர்களை விட பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்று கூறப்படுகிறது
பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகள் உள்ள பட்டியலில் 100 வது இடத்தில் இந்தியா இருந்துச்சாம்.. இப்போதைய கணக்கு இன்னும் சில மணி நேரத்தில் வரக்கூடும். இத்தனைக்கும் இந்தியாவில் உணவுக்கான உரிமை சட்ட பாதுகாப்பு கொண்ட அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
உலக அளவில் பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் போஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க நாள்தோறும் அவரது உணவின் வாயிலாக 2,100 கலோரி கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. வரையறுத்திருக்கிறது. உலகின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. அன்றாட உணவில் ஊட்டச்சத்து எவ்வளவு கிடைக்கிறது என்பதன் அடிப்படையிலேயே ஒருவர் வறுமையில் வாடுகிறாரா என்பது கணக்கிடப்படுகிறது. நகர்ப்புற குழந்தைகளை ஒப்பிடும் போது ஊட்டசத்து குறைபாட்டால் கிராமப்புற குழந்தைகள் 2 மடங்கு குள்ளமாக வளர்கின்றனர். உலகம் முழுவதும், போதிய உணவு கிடைக்காதே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்பதும் அதிர்ச்சித் தகவல்.