உலக விலங்குகள் தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 24 ம் தேதி நினைவுகூறப்படுகிறது

ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க விவிசெக்ஸன் சங்கம் ஏப்ரல் 24 ஐ உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.;

Update: 2022-04-24 06:04 GMT

உலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24 ஐ உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.

உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Day For Animals In Laboratories/World Lab Animal Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 24 அன்று நினைவுகூரப்படுகிறது. இந்நாளையொட்டிய வாரம் உலக ஆய்வக விலங்குகளுக்கான உலக வாரமாகக் கொண்டாடப்படுகிறது

1979ஆம் ஆண்டில், அமெரிக்க, தேசிய எதிர்ப்பு விவிசெக்சன் சங்கம் ஆய்வக விலங்குகளுக்கான உலக தினத்தை ஏப்ரல் 24 அன்று - லார்ட் ஹக் டவுடிங்கின் பிறந்தநாளின் போது தோற்றுவித்தது.. இந்த உலக நினைவு நாள் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள எதிர்ப்பு-விவிசேஷனிஸ்டுகளால் ஆண்டுதோறும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Tags:    

Similar News