டிக் வைரஸ்: நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைள்

Tick borne diseases in humans-இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ’டிக் வைரஸ்’ பரவல் காரணமாக கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.;

Update: 2023-04-05 10:00 GMT

பைல் படம்.

Tick borne diseases in humans-டிக் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில், புதிய நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா முதல் அலைக்கு மத்தியில் உலகம் அலைக்கழிந்தபோது, கொரோனா அல்லாத ஒரு வகை வைரஸ் காய்ச்சலுக்கு, சீனாவில் மட்டும் 60க்கும் மேலானோர் இறந்து போனார்கள். தொடர்ந்து கொரோனா அதிகம் பரவிய இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ’டிக் வைரஸ்’ என்ற பெயரிலான இதன் பரவலும், அதன் காரணத்திலான கணிசமான உயிரிழப்புகளும் தொடர்ந்தன.

லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த கொரோனா பரவலின் முன்பாக கணிசமான உயிர்களையே காவு வாங்கிய டிக் வைரஸை உலகம் பொருட்படுத்தவில்லை. மருத்துவ ஆய்வில் உண்ணிகளால் பரவும் காய்ச்சல் வகையை சேர்ந்தது என டிக் வைரஸ் வகைப்படுத்தப்பட்டது. ரத்தம் மற்றும் இதர உடல் திரவங்களால் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டது. விலங்கினங்களை சார்ந்திருக்கும் உண்ணிகளால் இந்த வைரஸ் பரவல் ஏற்படுகிறது எனவும் தெரிய வந்தது.

இது கொரோனாவுக்கு முன்பிருந்தே உலகில் நீடித்திருந்த போதும், கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பல்வேறு வைரஸ் பரவல்களும் அதிகரித்ததன் மத்தியில் டிக் வைரஸ் பரவல் கூடுதல் வேகம் பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால், வெளியிடங்களில் இருந்து வீட்டுக்கு வரும்போது, உடலில் உண்ணிகள் இருக்கிறதா என சரிபார்க்குமாறு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சில இடங்களில், தூய்மை பேணப்படாத கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளாலும் இந்த வைரஸ் பரவல் நேரிடலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் தொடங்கியிருப்பதன் மத்தியில், டிக் வைரஸ் உட்பட இதர தொற்றுகள் எதுவானாலும் மக்கள் மத்தியில் அச்சுறத்தவே முற்படுகின்றன. உலகளவிலான இந்த புதிய மாறுதல், மக்கள் மத்தியில் தூய்மை, சுகாதாரம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு, வாழ்வியல் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை பொறுத்து டிக் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News