பிரிட்டிஷ் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெறவுள்ளது

Update: 2021-04-17 05:39 GMT

மறைந்த பிரித்தானிய இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கு இன்று இடம்பெறவுள்ளது. அவரது இறுதி கிரியை நிகழ்வுக்கு 30 பேரை மட்டும் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளமை காரணமாக சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு இறுதிகிரியைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பக்கிங்ஹேம் அரண்மனை அறிவித்துள்ளது.

இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது கணவரின் இறுதிச் சடங்கில் தனியாக பங்கேற்கவுள்ளார். இளவரசர் பிலிப்பின் உடலை எடுத்துச்செல்லும் வாகனத்தின் பின்னால் அவரது பிள்ளைகள் செல்லவுள்ளதாககவும் பக்கிங்ஹேம் அரண்மனை அறிவித்துள்ளது.




 


Tags:    

Similar News