யாழ்ப்பாணம் மாநகரசபை மேயர் மணிவண்ணன் கைது தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆட்சியின் கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசத்தை நோக்கிய ஒரு நிலையான பாதையில் தவிர்க்க முடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள மாநகரசபை முதல்வரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.