சீனப்பெண் எழுதிய தமிழ் நூலை நெல்லையில் தமிழ் முழக்கப் பேரவை வெளியிட்டது

9 நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் நேரிலும், இணையம் வழியாகவும் கலந்து கொண்டனர்.;

Update: 2022-02-15 16:29 GMT


பப்புவா நியூ கினி (Papua New Guinea) நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல் 

தமிழறிஞரான சீனப்பெண் நிறைமதி (Zhang Qi), தமிழகத்தில் பயணம் செய்து தமிழர்களின் பண்பாடு குறித்து ஒரு நூலை எழுதினார். தமிழகத்தின் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆர்ட் ஆப் கிவ்விங் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் Dr. இராமசாமி ராஜேஷ் குமார், இவர் சீனாவின் ஜேஜியாங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர் இந்த நூலின் பதிப்பாசிரியர் ஆவார். சீனப்பெண் நிறைமதி @ Zhang Qi தமிழ் மீது ஈடுபாடு கொண்டவர். அதனால் தனது பெயரை நிறைமதி என்று தமிழில் மாற்றிக்கொண்டவர். தமிழ் அழகாக பேச எழுத தெரிந்தவர். தமிழகத்தின் பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு தமிழர்களின் பண்பாடு மற்றும் தமிழின் சிறப்புகளை தனது நூலில் அழகாக பதிவும் செய்துள்ளார்.


நிறைமதி (Zhang Qi) 1989ம் ஆண்டில் சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பிறந்து பூசியான் மாகாணத்தில் வளர்ந்தார். பெய்ஜிங்கிலுள்ள தகவல் தொடர்புப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தமிழ் பட்டம் பெற்றார். ஹாங்காங்கின் சைனீஸ் யூனிவர்சிட்டி ஆஃப் ஹாங்காங்கில் சர்வதேச அரசியல் பொருளாதாரம் எனும் முதுகலைப் பட்டம் பெற்றார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்தார். தற்போது சீனாவின் யுன்னான் மிஞ்சூப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் தலைவராக உள்ளார். இவர் சீனாவில் தமிழ் பாடநூல் எழுதி வெளியிடுதல், தமிழர் பண்பாட்டைச் சீனர்களுக்கு அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.

தமிழ் முழக்கப் பேரவை தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பா

இவரின் பணியை பாராட்டி "தமிழ் முழக்கப் பேரவை" தமிழகத்தின் திருநெல்வேலியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சைவ சபையில் பிப்ரவரி 12ஆம் தேதி அந்த நூலை வெளியிட்டு பாராட்டு விழா நடத்தினர்.

இந்த விழாவிற்கு பப்புவா நியூ கினி (Papua New Guinea) நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல் இணைய வழியில் தலைமை தாங்கி உரையாற்றினார். தமிழ் முழக்கப் பேரவை அமைப்பாளர் தேசிய நல்லாசிரியர் முனைவர். சு.செல்லப்பா நேரில் முன்னிலை வகித்து உரையாற்றினார். பொது அறுவை சிகிச்சை நிபுணரும் எழுத்தாளருமான பேராசிரியர், டாக்டர் மகாலிங்கம் ஐயப்பன் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார்.

மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் Dr. சுதாகர் 

மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் Dr. சுதாகர் புத்தக அறிமுக உரை செய்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பல்கலைக்கழக பேராசிரியர் Dr. N.கிருஷ்ணன் புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் Dr. இராமசாமி ராஜேஷ் குமார்

நோய்த்தொற்று காலத்தை கவனத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என ஒன்பது நாடுகளில் இருந்தும் தமிழறிஞர்கள், கலைஞர்கள் இணைய வழியில் கலந்து கொண்டும், பலர் நேரிலும் வந்து சிறப்பித்தனர்.

மனோன்மணியம்சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் Dr. N.கிருஷ்ணன்

இணைய வழியிலும் நேரடியாகவும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்கம் மாநிலத் தலைவர்.கவிஞர் நா.சுப்பையா தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை தொடங்கினார். 



சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாழ்த்துரை :

சுபாஅபர்ணா சசீந்திரன், Papua New Guinea

பேராசிரியர். ராமமூர்த்தி, முன்னாள் தலைவர், இந்திய மொழிகளுக்கான (LDC-IL) மொழியியல் தரவுக் கூட்டமைப்பு, இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம்.

பேராசிரியர். இரா.குறிஞ்சிவேந்தன், தலைவர், அயலகத் தமிழ்த்துறை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

பேராசிரியர். N.நடராஜ பிள்ளை, முன்னாள் துணை இயக்குநர், இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், (இந்திய அரசு), மைசூர், இந்தியா.

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு

குணபதி ஆறுமுகம், மலேசியத் தமிழர் சங்கத்தின் மத்திய செயலவை உறுப்பினர், மலேசியா

பேராசிரியர் Dr நமசிவாயன் கணேஷ் பாண்டியன், கியோட்டோ பல்கலைக்கழகம், ஜப்பான்

முகமது சரீஃப், மூத்த கல்வியாளர், சிங்கப்பூர்

எனர்ஜைல்' மகேந்திரன் பெரியசாமி, இயக்குநர், எய்ம்ஸ் இந்தியா அறக்கட்டளை, வாசிங்டன் டிசி, அமெரிக்கா

Dr. B.இராமநாதன், Founder & MD, ACE International Pte Ltd, Singapore

தளவாய் திருமலையப்பன் (எ) நாதன், புரவலர், பொருநை இலக்கிய வட்டம்.

பேராசிரியர்.ராஜமூர்த்தி, மதுரை.

கந்தசாமி -சீவலப்பேரி IOB வங்கி மேலாளர் (பணி ஓய்வு)

மது முருகன், நிறுவனர் மற்றும் இயக்குநர், ஐக்கிய தமிழ் (UK) அமைப்பு, இங்கிலாந்து.

லதா சந்துரு, நிறுவனத் தலைவர்,  தேனமுதத் தமிழ்ச் சங்கம், மயிலாடுதுறை

ஆகியயோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

புத்தக ஆசிரியர் நிறைமதி (张琪 (Zhang Qi), (தமிழ்த் துறைத் தலைவர், யுன்னான் மிஞ்சூப் பல்கலைக்கழகம், சீனா.) ஏற்புரை வழங்கி நன்றி தெரிவித்தார்.  தமிழ் முழக்கப் பேரவை பொருளாளர், பைபாஸ் மெடிக்கல் சு.சண்முகவேலன் நன்றியுரை வழங்கினார். 



Tags:    

Similar News