'போரை உடனே நிறுத்து'- ரஷ்யாவிற்கு சர்வதேச நீதிமன்றம் கட்டளை

உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்தும்படி ரஷ்யாவிற்கு சர்வதேச நீதிமன்றம் கட்டளையிட்டு உள்ளது.;

Update: 2022-03-17 02:26 GMT

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 20 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரைக் கைப்பற்றுவதற்காக ரஷ்ய துருப்புகள் கடுமையான போரில் ஈடுபட்டு உள்ளன. இதனால் உக்ரைன் நாட்டில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள். முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு நாடு சுடுகாடு போல் காட்சியளிக்கிறது.

இந்த இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் சர்வதேச அளவிலும் பல நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு நட்பு நாடுகள் உள்பட பல நாடுகள் எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும் இதுவரை போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை .இந்த நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் நாட்டின் அதிபர் லென்ஸ்கி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச நீதிமன்றம் விசாரித்து ரஷ்யா உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவையடுத்து ரஷ்யா கடைப்பிடித்து போரை நிறுத்துமா என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News