15 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்: கண்காணிப்பில் ஐஎன்எஸ் சென்னை
சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தப்பட்டுள்ளது.
சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சென்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்திய கடற்படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
சோமாலியா கடற்பகுதியில் நேற்று மாலை 'எம்.வி.லீலா நோர்ஃபோக்' என்ற சரக்கு கப்பல் கடத்தப்பட்டதாகவும், அதை நோக்கி விரைந்துள்ள இந்திய கடற்படையால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் உள்ளனர், ஊழியர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், சோமாலியா கடற்பகுதியில் கப்பல் கடத்தப்பட்டதாக வியாழக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. மேலும், இந்திய கடற்படை விமானங்கள் கப்பலை கண்காணித்து வருகின்றன. இந்திய கடற்படை போர்க்கப்பல் ஐ.என்.எஸ் சென்னை கடத்தப்பட்ட கப்பலை நோக்கி நகர்ந்து வருகிறது.
இவ்வாறு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரபிக்கடலில் ஒரு சரக்குக் கப்பல் கடத்தலுக்கு (5-6 துப்பாக்கி ஏந்தியவர்கள்) பதிலடி கொடுக்க இந்திய கடற்படை ஐ.என்.எஸ் சென்னை (D65) என்ற ஏவுகணை அழிப்புக் கப்பலை அனுப்பியுள்ளது. இது காற்று, மேற்பரப்பு, நீருக்கடியில், மின்னணுப் போர் செய்யும் திறன் கொண்டது.
கடற்படையின் ரோந்து விமானமும் சம்பவ இடத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்ட கப்பலைக் கண்காணித்து வருகிறது.