"சீரியல் கில்லர்" சார்லஸ் சோப்ராஜ் விடுதலை

கொலைக் குற்றச்சாட்டில் சுமார் 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்த நேபாள உச்ச நீதிமன்றம்,;

Update: 2022-12-22 14:16 GMT

கொலைக் குற்றச்சாட்டின் பேரில் இருபது ஆண்டுகளாக சிறையில் உள்ள இந்திய மற்றும் வியட்நாமிய பெற்றோருக்கு பிறந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோப்ராஜை (78) விடுதலை செய்ய நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேபாளத்தில் 2003 ஆம் ஆண்டு தண்டனைக்கு முன் சோப்ராஜ் எந்த நாட்டிலும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர் 1970 களில் 15 முதல் 20 பேரைக் கொன்றதாக நம்பப்படுகிறது.

அவர் பெரும்பாலும் ஆசியாவில் மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளுடன் நட்பு கொண்டார், பின்னர் 1972 மற்றும் 1976க்கு இடையில் போதைப்பொருள் கொடுத்து அவர்களைக் கொன்றார்.

பல ஆண்டுகளாக, சோப்ராஜ் ஏமாற்றுதல் மற்றும் ஏய்ப்பதில் தனது திறமையால் "பிகினி கில்லர்" மற்றும் "தி சர்ப்பன்" என்ற புனைப்பெயரைப் பெற்றார்.

1975 இல் அமெரிக்க ரான கோனி ஜோ ப்ரோன்சிச்சைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் 2003 முதல் காத்மாண்டுவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்கப் பெண்ணைக் கொன்றதை சோப்ராஜ் மறுத்தார். மேலும் அவரது வழக்கறிஞர்கள் அவர் மீதான குற்றச்சாட்டு அனுமானத்தின் அடிப்படையில் இருப்பதாகக் கூறினர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ப்ரோன்சிச்சின் கனடிய நண்பரான லாரன்ட் கேரியரைக் கொன்றதற்காகவும் அவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.ஆனால் அவர் மேலும் பல கொலைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டது.

"பிகினி கொலையாளி" என்று அறியப்பட்ட அவர்  1970களின் நடுப்பகுதியில் தாய்லாந்தில் போதைப்பொருள் கொடுத்து ஆறு பெண்களைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது, அவர்களில் சிலர் பட்டாயாவின் ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள கடற்கரையில் இறந்துவிட்டனர்.

எவ்வாறாயினும், அந்த குற்றச்சாட்டுகளின் மீது அவர் விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு விஷம் கொடுத்தது மற்றும் இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது ஆகியவற்றுக்காக  இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்/. 1980களின் நடுப்பகுதியில் இந்தியாவில் சிறையிலிருந்து தப்பியதைத் தொடர்ந்து அவர் மாறுவேடமிடும் திறமையால் அவர் "பாம்பு" என்றும் அழைக்கப்பட்டார். பின்னர் பிடிபட்டு 1997 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் இந்தியாவில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சுக்குத் திரும்பினார்.  ஹாங்காங் நாட்டில் இருந்து போலி அடையாளத்துடன் நேபாள நாட்டுக்கு சென்ற சோப்ராஜ், தலைநகர் காத்மண்டுவில் கேசினோ ஒன்றில் வைத்து 30 ஆண்டுகளுக்கு முன்பு, 1975 ஆம் ஆண்டு ப்ரோன்சிச் மற்றும் கேரியரின் கொலைகள் தொடர்பாக காத்மாண்டுவில் அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

நேபாளத்தின் உச்ச நீதிமன்றம் அவரது வயது காரணமாக அவரை விடுவிக்க உத்தரவிட்டது. அவர் தனது 20 ஆண்டுகால ஆயுள் தண்டனையில் 19 ஆண்டுகள் அனுபவித்தார்

Tags:    

Similar News