ஜனவரி 29 ஆம் தேதி கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வழங்கவுள்ளதாக அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இதற்காக தடுப்பூசி தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனவரி 29 ஆம் தேதி கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியை ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வழங்க எதிர்பார்த்துள்ளோம், இந்தியாவில் இருந்தும் ஒரு தொகுதி தடுப்பூசி கிடைக்கவுள்ளது, மார்ச் 31 ஆம் தேதி கிடைக்கும் தடுப்பூசிகள் தொகை போதுமானது, ரஸ்யாவின் ஸ்புட்டிங் தடுப்பூசியை பெறவும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை பெறுவதில் சிரமம் உள்ளது என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை கூறினார்.