உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்ந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.;

Update: 2022-02-24 05:22 GMT

ரஷ்ய நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் நகரங்களில் பல இடங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது. 2 லட்சம் ராணுவ வீரர்களை எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதையடுத்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தலைநகர் கீவ்-வில் ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிவதாகவும் ஒடேசா, கார்கிவ், மைகோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருகிறது எனவும் கூறப்படுகிறது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் புதின் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக உயர்ந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,366 புள்ளிகள் சரிந்து 55,865 புள்ளிகளில் வணிகமாகிறது.

Tags:    

Similar News