ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மர்மமான முறையில் உயிரிழப்பு

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Update: 2024-02-16 13:10 GMT

சிறையில் உயிரிழந்த அலெக்ஸி நவால்னி.

ரஷிய நாட்டி்ன் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர்  விளாடிமிர் புடின். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததான் மூலம் இவர் உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளானார். புதினுக்கு எதிரான  விமர்சகர்களில் ஒருவராக அலெக்ஸி நவால்னி நீண்ட காலமாக உள்ளார். இவர் அந்நாட்டின் எதிர்கட்சி தலைவர்  ஆவார்.

ஊழலை அம்பலப்படுத்துவதில் ஆர்வம் கொண்ட வழக்கறிஞரும் ஆர்வலருமான நவால்னி, புடினின் நிர்வாகத்திற்கு எதிரான பரவலான போராட்ட இயக்கத்தை உருவாக்கியுள்ளார். அவரது தைரியமான எதிர்ப்பு முயற்சிகள் சர்வதேச பாராட்டுகளைப் பெற்று இருந்தன. மேலும் ரஷ்யாவிற்குள் அவருக்கு பட்டம், சிறைத்தண்டனை மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன.

1976 இல் பிறந்த இவர் சட்டம் பயின்றவர் ஆவார்.  உயர்மட்ட ரஷ்ய அரசாங்க ஊழலை விசாரித்து அம்பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். தனது கண்டுபிடிப்புகளைப் பொதுவில் வைக்க சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப்பை  பயன்படுத்தினார். முன்னேற்றக் கட்சியை நிறுவி  தேர்தலில் பங்கேற்கும் முயற்சிகளை கையாண்டார். இதன் காரணமாக அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது தடைசெய்யப்பட்டது. விஷம் வைத்து கொல்வதற்கு முயற்சிக்கப்பட்டது. இதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்று ரஷ்யாவிற்கு திரும்பிய உடன் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவில் பெரும் போராட்டங்கள் நடந்தன. சர்வதேச  நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் அறக்கட்டளை நிதி மோசடி தொடர்பாக புதின் அரசால் கடந்த 2021ம் ஆண்டு நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.  கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்த நிலையில் தான் தற்போது நவால்னி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் உடல் நலக்குறைவினால் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் இறப்பிற்கான உண்மையான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

Tags:    

Similar News