புத்தாண்டுக்குப் பிறகு பல்கலைக்கழகங்களைத் திறக்க தீர்மானம் -ஆணைக்குழு

Update: 2021-04-07 07:59 GMT

இலங்கையில் புத்தாண்டுக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களைத் திறக்க  முடிவெடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித் துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் திறக்க என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான தேதி குறித்து ஆலோசித்து வருவதாக வருவதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

இதற்கான சுகாதார ஆலோசனைகளைப் பல்கலைக்கழகங்களுக்கு அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.இருப்பினும், நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேர்வுகளை நடத்தப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News